அச்சுறுத்தலாக மாறும் பொன்சேகா – தூதரகங்களின் திடீர் நடவடிக்கை!

Sunday, May 7th, 2017

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிபகிஷ்கரிப்புகளை முன்கூட்டியே தடுப்பதற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு விசேட அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பில் இலங்கையில் செயற்படும் வெளிநாட்டு தூதரகங்கள் விசேட அவதானத்தை செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

பொன்சேகாவின் புதிய அதிகாரம் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை தயாரித்து, தங்களின் நாடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தூதரகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக தூதரக உயர் அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடம் தகவல்கள் பெற்றுக் கொண்டதாக தெரியவருகிறது.பொன்சேகா தொடர்பில் ராஜித வெளியிட்ட கருத்துக்களில் வலுவான விடயங்கள் எதுவும் காணப்படவில்லை.

இந்த விடயம் அரசாங்கத்தின் உண்மையான தீர்மானமாக எதிர்வரும் காலங்களில் செயற்படுத்தப்படுமா என ஆராய்ந்து பார்ப்பதற்கு குறித்த தூதரகங்கள் அவதானத்தை செலுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106