இந்தியாவுடன் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம்!
Thursday, May 4th, 2017
இலங்கைக்கும் இந்தியாக்கும் இடையில் பாரம்பரிய மருத்துவ முறைகளை பரிமாறிக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஆலோசனைக்கமைவாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கிடையில் பாரம்பரிய மருத்துவமுறைகள் ஹோமியோபதி மருத்துவத்துறையுடன் தொடர்புபட்ட அறிவு தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வதற்கும் இத்துறைகளில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்னேற்பாடு தொடர்பான கல...
கால மாற்றத்திற்கேற்ப இளம் சிறார்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட வேண்டும் – சிந்துபுரம் காந்திஜி சனசமூக...
நாட்டில் சீனிக்கு தட்டுப்பாடு கிடையாது - 75 ஆயிரம் மெட்ரிக்தொன் சீனி கையிருப்பில் உள்ளதாக இராஜாங்க அ...
|
|
|


