காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்புக்கு 45.27 மில்லியன் டொலர்!
Thursday, May 4th, 2017
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் இந்திய இறக்குமதி – ஏற்றுமதி வங்கியுடன் கலந்துரையாடி ஒப்புதல்களை கைச்சாத்திடுவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கான ஆவணத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்
Related posts:
அர்ஜுன் மகேந்திரனுக்கு விரைவில் இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கை?
பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை - இராஜா...
நாடு வீழ்ச்சியடைந்த போது எதிர்க்கட்சிகள் ஒளிந்துகொண்டனர் - நாட்டை மேம்படுத்த முன்னிற்பதிலும் அரசியல்...
|
|
|


