யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் சூடு பிடித்துள்ளது  

Saturday, May 7th, 2016

சுட்டெரிக்கும் வெயிலையடுத்து  யாழ். நகர்ப் பகுதி மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் உட்பட யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இளநீர் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது .

முன்னர்  50 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட இளநீரொன்று  தற்போது  70 ரூபா முதல் 80 ரூபா வரை  விற்பனையாகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் தற்போது ஒரு நாளைக்குச் சராசரியாக நூறு இளநீர்கள் விற்பனையாகிறது.  இதன் மூலம் முன்னரை விட அதிக இலாபம் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவுள்ளதாக யாழ். நகரில் கொளுத்தும் வெயிலின் மத்தியில் மர நிழலின் கீழ் இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் குடும்பஸ்தரொருவர் தெரிவித்தார்.

Related posts:

புதிய சட்ட மா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்னம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!
யாழ்ப்பாணம் - முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு - வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச...
இலங்கைக்கான கடன் ஒருங்கிணைப்புக் குழு - இந்தியா, பிரான்ஸ், ஜப்பான் இணைவு என நிதி இராஜாங்க அமைச்சர் ஷ...