வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர கோரிக்கை!

Wednesday, May 3rd, 2017

மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு தொழில்வாய்ப்பிற்காக சென்று இதுவரையில் எந்த தகவலும் கிடைக்காத குடும்ப அங்கத்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.

இறக்குவாணையைச் சேர்ந்த புஞ்சி கல்வெட்ட வத்த தெமுவத்த என்ற இடத்தை சேர்ந்த நிர்மலா பெரியசாமி , காலி கலகொட என்ற இடத்தை சேர்ந்த கே.அனுலாவதி டி சில்வா, கொப்டன் பங்களாப்பிரிவு கொப்டன் தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட வி.வடிவேலு விஜயலலிதா , உஹன கொன்கஸ் சந்தி என்ற இடத்தை சேர்ந்த எவ்.பிறேமாவதி , பிங்கிரிய அலுத்கமயைச் சேர்ந்த ஜே.ஏச்.சாமளி ஆகியோர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக சென்று காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி தொடக்கம் 2009 ஆண்டு மார்ச் மாதம் 28ம் திகதி காலப்பகுதியில் வெளிநாடு சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பை பணியகம் எதிர்பார்த்திருப்பதாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருப்போர் 0114379328 அல்லது 0112 864136 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக விபரங்களை வழங்குமாறு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106