நஞ்சு அருந்திய நிலையில் மீட்கப்பட்ட காதல் ஜோடி!

Monday, May 1st, 2017

நஞ்சு அருந்திய நிலையில் குற்றுயிராய் மீட்கப்பட்ட காதல் ஜோடி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியியை சேர்ந்த 22 மற்றும் 23 வயதுடைய இளம் ஜோடிகளே இவ்வாறு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த இளம் ஜோடியினர் நேற்று காலை யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.

நீண்ட நேரமாக கோட்டை பகுதியில் கதைத்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென மயங்கி விழுந்துள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் யாழ்ப்பாணத்துக்கு சென்று, நஞ்சு அருந்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு பொலிஸார் ஊடாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106