செயலாளர் நாயகத்திற்கும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது…
Sunday, April 23rd, 2017
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொதுச்சபைக் கூட்டம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றையதினம் நடைபெற்றது.
கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது இதுவரை விடுவிக்கப்படாத மக்களது காணிகள் தொடர்பாகவும் அரச தொழில் வாய்ப்பை பெற்றுத்தரக்கோரி தொடர்ச்சியாக போராடிவரும் வேலையற்ற பட்டதாரிகளது போராட்டம் தொடர்பாகவும் கட்சியின் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் செயலாளர் நாயகத்துடன் விரிவாக கலந்துரையாடினர்.
மேலும் அக்கலந்துரையாடலில் மேதின நிகழ்வுகள் தொடர்பாகவும் கட்சியின் யாழ்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் விளக்கமளித்தார்.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் தீவக பிரதேசத்திற்கான முன்னமர்வு வெகு விமர்சையாக ஆரம்பம்!
பூவக்கரை கலைமகள் சனசமூக நிலைய கட்டிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு !
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெறும் ஜூலை மாதத்துக்கான யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
|
|
|


