குப்பிளானில் திருட்டு முயற்சி முறியடிப்பு!

Sunday, April 23rd, 2017

குப்பிளான் தெற்கில் கடந்த வெள்ளிக்கிழமைபட்டப்பகல் வேளையில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சி பெண்ணொருவரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. முற்பகல்-11 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குப்பிளான் தெற்குப் பகுதியில் தாயும், மகளும் தனித்திருந்த வேளையில் வெளியிடத்திலிருந்து வருகை தந்து கடந்த சில மாதங்களாக நல்லெண்ணை வியாபாரம் மேற்கொண்டு வரும் நபரொருவர்அப் பகுதியிலுள்ள வீதியோரமாக மோட்டார்ச் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குப் பின்புறமாகவுள்ள வாழைத் தோட்டத்தில் வாழைக்குலைகளைத் திருடுவதற்கு முயற்சித்துள்ளார்.

இதன் போது குறித்த நபர் பெறுமதியான கப்பல் வாழைக்குலையொன்றை வெட்டிக் கொண்டிருந்த வேளை தற்செயலாக வீட்டிற்குப் பின்புறமாக வந்த வீட்டுக்கார மகள் திருடன்….திருடன்…எனச் சத்தமாகக் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளார். இதனையடுத்துக் குறித்த நபர் தான் வெட்டிய வாழைக்குலையையும் கைவிட்டு அங்கிருந்து மோட்டார்ச் சைக்கிளில் தப்பியோடியுள்ளார்.

குறித்த நபர் வழமையாகக் குறித்த வீட்டிற்கும் நல்லெண்ணை  கொண்டு வந்து விற்பனை செய்யும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.  இதனையடுத்துக் குறித்த நபரை ஊர் முழுவதும் தேடிய போதும் அந்த நபர் பிடிபடவில்லை.

இதேவேளை, குப்பிளான் பகுதியிலுள்ள வாழைக்குலைத் தோட்டமொன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவு வேளையில் சில செவ்வாழைக் குலைகள் திருட்டுப் போயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106