இலங்கை புகைப்படக்கலைஞருக்கு சர்வதேச விருது!
Friday, April 21st, 2017
தகவல் திணைக்களத்தின் புகைப்படப்பிடிப்பாளரான திருமதி யமுனி ரக்ஸ்மிகா பெரேரா சர்வதேச EXHIBITION MYSTIC 2017என்ற புகைப்படப் போட்டியின் மூலம் சர்வதேச பாராட்டை பெற்றுள்ளார்.
இதில் இவர் FIAPஎன்ற இரண்டு தங்கவிருதுகளையும் PSA தங்க விருதையும் பெற்றுள்ளார்.2nd International Photo Competition and EXHIBITION MYSTIC 2017 என்ற போட்டிக்கு இவரால் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்களுக்கு இந்த பரிசில்கள் கிடைத்துள்ளன.
சர்வதேச புகைப்பட போட்டி மற்றும் புகைப்பட கண்காட்சிகளிலும் இவருக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளது.இதுவரையில் பல தங்கப்பதகங்களையும் வெள்ளிப்பதங்கங்கள் மற்றும் வெண்கலப் பதக்கங்களுடன் கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.
இம்முறை 2nd International Photo Competition and EXHIBITION MYSTIC 2017 இவர்Contrast section – Gold PSA Fathers love, Photo Journalism – Open – Gold FIAP Last Moment, Photo Travel – Open – Gold FIAP Life Jump என்ற புகைப்பட போட்டியின் மூலம் இந்த விருதுகளைப் பெற்றார்.தகவல் திணைக்களத்தில் பணியாற்றிவரும் இவர் சர்வதேச புகைப்படப்போட்டியில் தங்கப்பதக்கத்தை பெற்ற முதலாவது பெண் புகைப்படப்பிடிப்பாளர் ஆவார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106