புதிய சிகரட் நிறுவனம் குறித்த தகவல் – ஜனாதிபதியின் கவனத்திற்கு!
Wednesday, April 19th, 2017
இலங்கைக்குள் மற்றுமொரு சிகரட் நிறுவனத்தை பதிவு செய்ய தயாராகி வருவதாக வெளியான தகவல் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
சிகரட் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதியால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தமது சங்கம் நிபந்தனைகளற்ற ஆதரவளித்துள்ளதாக, அச்சங்கத்தின் செயலாளர் நலிந்த சொய்சா தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்குள் புதிய சிகரட் நிறுவனம் ஒன்று பதிவு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து ஆராய்ந்து, இதன் பின்னணியில் இருக்கும் வர்த்தகர்கள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க எமது சங்கம் முடிவு செய்துள்ளது.
நாட்டில் சிகரட் உற்பத்தினை குறைப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பக்கபலமாக செயற்பட்டுள்ளது. அதனால் பக்க பலமாக செயற்பட்டோம். எனவே தற்போது சிகரட் உற்பத்தியை தடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்க முடியும்.
இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் சிகரட் உற்பத்தியை குறைக்க பல தரப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற போது மறுபுறத்தில் சட்டவிரோதமான முறையில் சிகரட் நிறுவனம் ஒன்று நாட்டினுள் நிறுவப்பட்டு வருகின்றது.
இந்த செயற்பாடுகளின் பின்னால் உள்ள வர்த்தகர்கள் யாவர் என்பதை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கோரிக்கை விடுக்கும் அதேவேளை நாட்டில் சிகரட் உற்பத்தியை மட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முழு மூச்சுடன் செயற்படும் என்றார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106