மின்சாரக் கட்டண பற்றுச்சீட்டுக்கள் வழங்கவில்லை கிளிநொச்சி மாவட்ட மக்கள் விசனம் !

Wednesday, April 19th, 2017

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த பல மாதஙகளாக மின்சார கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை என்று பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் கட்டம் கட்டமாக மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் அப்போதைய மஹிந்த ராஜபக்‌ஷ அரசால் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

எனினும் அந்தக் காலப்பகுதி நிறைவுற்றும் வழமை போன்று கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கும் மின்சாரக் கட்டணம் அறவிட்டுவந்தது எனினும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலான மின்மானி வாசிப்பாளர் தமது பகுதிகளுக்கு விஜயம் செய்வதில்லை என்றும் தமக்கான மின் கட்டண பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள மக்கள் இதற்கான தீர்வு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் எதிர்வரும் காலத்தில் தமக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்படுமா என்று அச்சம் வெளியிட்டுள்ள மக்கள் கடந்த காலங்களில் வழங்கப்படாத மின் கட்டண பட்டியல் ஒரே தடவையில் வழங்கப்படாததால் அதற்கான கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்றும் கலக்கமடைந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட மின்சார சபை அதிகாரிகள் தெரிவிக்கையில், மின்சாரசபை அலுவலகத்தில் ஆளணிப்பற்றாக்குறை காணப்படுகின்றது இதனாலேயே இந்தப் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று பதிலளித்துள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106