‘நிகாப்’ ஆடைக்கு தடை விதிக்க எகிப்து முயற்சி!
Tuesday, April 11th, 2017
முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்க அணியும் நிகாப் ஆடைக்கு தடை விதிக்கும் சட்டம் ஒன்றை எகிப்து பாராளுமன்றம் இயற்றி வருகிறது.
பொது இடங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் இந்த ஆடையை அணிய தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்ட கொண்டுவரப்படுவதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் ஒப்பீட்டு சட்டவியல் பற்றிய அல் அஸ்ஹர் பல்கலைக்கழக விரிவுரையாளருமான அம்னா நுஸைர், முகத்தை மறைக்கும் ஆடை இஸ்லாத்துடன் தொடர்புபட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்திற்கு முன்னர் அரபு தீபகற்பத்தில் யூத சம்பிரதாயமாக புர்கா ஆடை இருந்ததாக குறிப்பிடும் அந்த எம்.பி, இது குர்ஆனின் பல வசனங்களுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளார்.
எனினும் முகத்தை மறைக்கும் நிகாப் ஆடைக்கு அண்மைக்காலத்தில் எகிப்தில் பல கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரியில் மருத்துவர்கள், மருத்துவ தாதிகள் நிகாப் அணிய கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவ பீடம் தடைவிதித்தது. கடந்த செப்டெம்பரில் பல்கலைக்கழகங்கள் கல்விசார் ஊழியர்களுக்கும் நிகாப் அணி யத் தடை விதித்தது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106