பகிடிவதை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 28 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!

Tuesday, April 11th, 2017

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை குறித்து விசாரணைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காகக்காக சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.எம்.நாஜிம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை வளாக பிரயோக விஞ்ஞான பீடத்தில் புதுமுக மாணவர்கள் பகிடிவதைக்கு உள்ளாவதாகக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, பகிடிவதையில் ஈடுபட்ட 18 மாணவிகளுக்கும் 10 மாணவர்களுக்கும் ஒரு மாத வகுப்புத்தடை அறிவிக்கப்பட்டது.

பிரயோக விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்களுக்கே வகுப்புத்தடை அறிவிக்கப்பட்டதாக துணை வேந்தர், பேராசிரியர் எம்.எம்.நாஜிம் தெரிவித்தார். மேலும், சுற்றிவளைப்பின் போது குறித்த மாணவர்களிடமிருந்து மருந்து வில்லைகளும், சில கோப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106