அமெரிக்காவை ஆட்சி செய்வது ஒரு முட்டாள் – ஐ.எஸ்!
Sunday, April 9th, 2017
அமெரிக்காவை ஒரு முட்டாள் ஆட்சி செய்து வருவதாக இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு விமர்சித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் அவர் பற்றி குறிப்பிட்டு ஐ.எஸ் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஐ.எஸ். இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் அபுஹசன் அல் முஹாஜிர் பேசிய 37 நிமிடம் ஓடும் ஒடியோ பதிவொன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்கர்களே நீங்கள் திவாலாகப் போகிறீர்கள். உங்களை சாவு எதிர்நோக்கி காத்து இருக்கிறது. இதற்கு தயார் ஆகுங்கள்.
தற்போது உங்களை ஒன்றும் தெரியாத முட்டாள் (டொனால்ட் ட்ரம்ப்) ஆண்டு கொண்டு இருக்கிறார்.
அவரால் நீங்கள் நாசம் அடைய போகிறீர்கள். டெனால்ட் ட்ரம்புக்கு ஈராக் பற்றியோ, ஐ.எஸ். இயக்கம் பற்றியோ, இஸ்லாம் பற்றியோ எதுவுமே தெரியாது. அவருக்கு போதிய அறிவு இல்லை என்று பேசி உள்ளார்.
Related posts:
பறவைக்காச்சல் தாக்கம்: சிக்கலில் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி நாடு!
திரிணாமுல் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் ராம்நாத் கோவிந்திற்கு திடீர் ஆதரவு
தேர்தல்கள் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம்!
|
|
|


