போதைப்பொருட்களுக்குத் தடை – தடையை மீறினால் ஒரு வருட சிறை!
Saturday, April 8th, 2017
இலங்கையில் சில போதைப் பொருட்களுக்குத் தடை விதிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் பாபுல்,பீடா,மாவா,ஹான்ஸ், புகையிலைத்தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு, இலத்திரனியல் சிகரெட் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன.
இவற்றை விற்பனை செய்தால் அபராதம் அல்லது ஒரு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிகரெட் பெட்டிகளில் 80 வீத எச்சரிக்கைப் புகைப்படம் கொண்டுவரப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 வீதப் பகுதிகளில் பெயரை மட்டுமே குறிக்கும் வகையில் ஏற்பாடு இடம்பெறும். அத்துடன் தனி சிகரெட் விற்பனைக்கும் தடை விதிக்கப்படும். அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள் உள்ள பகுதியின் 500 மீற்றர் வரையான தூரத்தில் சிகரெட் விற்பனை செய்வதற்கும், மதுபானம் விற்பதற்கும் தடை விதிக்கப்படும் என்றார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106