நடைபாதை வியாபாரத்திற்குத் தடை!

Saturday, April 8th, 2017

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

எமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எங்களிடம் அனுமதி பெறாமல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள்  வழங்கியுள்ளோம். எமது அறிவுறுத்தல்களையும் மீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளின் விற்பனைப் பொருட்கள் எம்மால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளோம்.

ஆனால், இதனைச் சற்றும் கருத்திலெடுக்காது ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில வியாபாரிகளும், சில புதிய வியாபாரிகளும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தொடர்ந்தும் வியாபாரிகள் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவார்களாயின் வியாபாரிகளின் பொருட்கள் கைப்பற்றப்பட்டுத் தண்டம் அறவிடப்படும்.

அத்துடன் அதற்கும் மேலாக நீதிமன்றத்தின் ஊடாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவிதித்துள்ளார்.

Related posts:


பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதற்கான மாற்று திட்டத்தை முன்மொழியுங்கள் – துறைசார் தரப்பினருக...
எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களின் ஆலோசனைகளை வழங்கலாம் - ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிப...
”எரிபொருள் வரிசையில் மணிக்கணக்காக காத்திருப்போர் குறைந்தபட்சம் இரண்டு லீட்டர் நீர் அருந்த வேண்டும்” ...