நாடாளுமன்றம் செல்லாது நீதிமன்றம் செல்லும் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
Wednesday, December 12th, 2018
இலங்கை அரசியலில் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவிகளது அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட கேள்விவிராந்து மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இந்த மனுவின் பிரகாரம் பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடை நீதிமன்றால் விதிக்கப்பட்டிருந்தது
இன்றைய விசாரணையின் போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களும் முன்னிலையாக வேண்டும் என்று நிதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிருந்தது.
குறித்த மனு இன்று மேல் நீதிமன்றத் நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோரால் விசாரிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் பிற்பகல் 1.00 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்து மஹிந்த ராஜபக்ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நீதிமன்றம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106