கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால்10 ஆம் திகதி முதல் போராட்டம்!
Friday, April 7th, 2017
புகையிரத கடவை காப்பாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் வடக்கு கிழக்கில் எதிர்வரும் 10 ம் திகதி தொடக்கம் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பணிப்புறக்கனிப்பில் ஈடுபடப்போவதாக வடகிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர். ஏஸ்.ஜே.ரொகான் ராஸ்குமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு புகையிரத கடவை காப்பானர் ஒன்றியத்தின் விசேட கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாலை மட்டக்களப்பு ஊறணி புகையிரத கடவைக்கு அருகிலுள்ள தனியார்கல்வி நிறுவன மண்டபத்தில் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சீ.ஜெயகாந்தன் தலைமையில் இடம்பெற்றது. அதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கடந்த 4 வருடங்களாக வடகிழக்கில் 1230 போ் புகையிரத கடவை காப்பாளர்களாக நாள் ஒன்றிற்கு 250 ரூபா வீதம் மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்திற்கு கட்டாயத்தின் போில் அரச, தனியார், தற்காலிக ஊழியர்கள் போன்ற எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி அடிப்படை தொழில் சட்டத்திற்கு முரணான விதத்தில் பணிக்கு அமர்தப்பட்டு நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலம் கடமைகளை செய்துவருகின்றோம் .
இந்த நிலையில் எங்களுக்கு புகையிரத திணைக்களத்திற்குரிய நேர அட்வணை வழங்கப்படாமல் புகையிரதம் வருவதை அவதானித்து ஒரு பக்க கடவையை மூடி மற்றுபக்க கடவையை மூடக் கூடாது நேரமில்லாது நிலையில் கடவைகளை பல்வேறு அசௌவ்கரியங்கள் மத்தியில் பாதுகாத்துவருகின்றோம். இவ்வாறு பணியாற்றிவருகின்ற நிலையில் தொடர்ந்து 180 நாட்கள் பணியாற்றினால் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் இருந்தும் இதுவரை எமக்கு நிரந்தர நியமனமே அல்லது தற்காலிக கடமையாளர்களே என்று எந்தவிதமான எழுத்து மூலமான கடிதங்கள் கூட வழங்கப்படாமல் உள்ளதுடன் கடந்த ஆட்சி காலத்தில் இருந்த போக்குவரத்த அமைச்சர் குமார வெல்கம் தென்னிலங்கையைச் சோ்ந்த ஆயிரம் பேரை புதிதாக புகையிரத திணைக்கள ஊழியர்களாக நியமித்தார்
இதனையடுத்து போக்குவரத்து அமைச்சர் பொலிஸ் மா அதிபர் புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் போன்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து எமக்கு நிரந்தர நியமனம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தோம் அதற்கு எந்தவிதமான தீர்வும் வழங்கப்படாதைதையடுத்து மதவாச்சியில் பிரதரான புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டு புகையிரதசேவையை தடைசெய்தோம்.
அதனையடுத்து வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விவசாய அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதாக எழுத்து மூலம் கடிதம் வழங்கிய பின்னர் அரசின் 24 திணைகள அதிகாரிகள், பொலிஸ்மா அதிபர், புகையிரத திணைக்கள் பொது முகாமையாளர், சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி உடபட பல அதிகரிகள் எங்களை அழைத்து அவமானப்படுத்தி அச்சுறுத்தி அனுப்பினர்.
1985 ம ஆண்டில் இருந்து இதுவரை புகையிரத வீதிக்கடவை காப்பாளர்களுக்கான வெற்றிடம் சரியாக நியமிக்கப்படவில்லை இந்த நிலையில் 1200 பேரை புதிதாக புகையிரத திணைக்கள ஊழியர்களாக நியமிப்பதற்கு பட்டியல் இடப்பட்டுள்ளது இவர்களில் வட கிழக்கை சோ்ந்தவர்கள் எவரும் இல்லை அதேவேளை எங்களை கூட உள்வாங்கப்படவில்லை.
இதேவேளை வடக்கில் 34 விபத்துக்கள் இடம்பெற்றது இதில் 12 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதுடன் இவைகள் தன்னியங்கி புகையிரத கடவை கதவு மற்றும் புகையிரத திணைக்கள கடவை ஊழியர்கள் பணிபுரிந்த இடத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் எமக்கு சம்பள உயர்வு எதுவம் இல்லை மருத்துவ விடுமுறை இல்லை மாதத்தில் 31 நாள் வந்தால் 30 நாளுக்கு மட்டும் தான் சம்பளம் இவ்வாறு மாதாந்தம் 7 ஆயிரத்து 500 ரூபா சம்பளத்துக்குள் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் வாழ்கையை நடாத்திவருகின்றோம் எனவே இந்த புதுவருடத்தில் ஆவது நாங்கள் எமது பிள்ளைகள் மனைவியுடன் ஓன்றாக இருந்து ஒரு நேர சாப்பாட்டை கூட சாப்பிடவேண்டும்.
எனவே எமக்கு புதுவருட மற்றும் ஏனைய பண்டிகை காளங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புதுவருட கொடுப்பணவை வழங்கப்படவேண்டும். 2- புகையிரத திணைக்கள சிற்றூழிர்களாக நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும், அல்லது வீதி அதிகார சபையில் வீதி பரமரிப்பாளர்களாக இருக்கும் வெற்றிடத்திற்கு எங்களுக்கு நியமனம் வழங்கவேண்டும். இவ்வாறான எமது அடிப்படை கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவேண்டும் இல்லாவிடில் எதிர்வரும் 10 திகதி முதல் பணிப் புறக்கனிப்பில் ஈடுபட்டனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106