பாடசாலைகளுக்கு முதலாம் தவணை விடுமுறை ஆரம்பம்!
Wednesday, April 5th, 2017
அரசாங்க மற்றும் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சிங்களப் பாடசாலைகளுக்கு, இன்று (05) முதலாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை இன்று (05) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பாடசாலைகள், இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும நாளை (06) நிறைவடைவதுடன், இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிபர் இல்லாமல் இயங்குகிறது முத்துக்குமாரசாமி மகா வித்தியாலயம்!
பிரயோக ரீதியான பயிற்சியுடன் கூடிய பாடநெறி - வெளிநாடு செல்லவுள்ள பணியாளர்கள் குறித்து வெளிநாட்டுத் தொ...
ஆலயத்திற்கு களங்கம் ஏற்படாத வகையில் அதன் புனிதத்தன்மை பேணப்படும் - திருக்கோணேஸ்வரத்தில் அமைச்சர் டக்...
|
|
|


