வீரவங்சவின் பிணை விண்ணப்பம் நிராகரிப்பு!
Monday, April 3rd, 2017
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் பிணை விண்ணப்பம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர் கடந்த ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அவரால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, விமல் வீரவங்ச சிறைச்சாலையினுள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். எனினும் அவர் அண்மையில் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ள நிலையில், இன்று அவர் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை கோட்டை நீதவான் நீதிமன்றமும் நிராகரித்துள்ளது.
Related posts:
இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை!
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயார் - அ...
அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் கல்விச் சீர்திருத்தம்!
|
|
|


