டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தகவல்!

Tuesday, May 21st, 2024

டெங்கு தீவிரமடைந்துள்ளதால் இவ்வருடம் இதுவரை 23,731 டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதாகத் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் தொடர் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கொழும்பு மாவட்டத்தில் 5057 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2214 பேரும், களுத்துறையில் 1244 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3879 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேலும், இந்த மாதத்தில் இதுவரை 1458 டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


வேறு திணைக்களங்களுக்குரிய மேய்ச்சல் தரவைகளால் தாமதம் -மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம்
முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை - வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப...
அனைத்து மாணவர்களும் தினமும் பாடசாலைக்கு வருவது அவசியம் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்த...