நெடுந்தீவு சிறுமி கொலை : சாட்சிப்பதிவுகள் இன்று!

Monday, April 3rd, 2017

நெடுந்தீவில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி ஜேசுதாஸ் லக்சினி என்ற 13 வயதுடைய சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிப்பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில், இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

குறித்த சிறுமி, 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நபர் ஒருவரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

நீதவான் நீதிமன்ற விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, வழக்கானது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் குற்றப்பத்திரத்தை யாழ். மேல் நீதிமன்றுக்கு, கடந்த 2017.03 ஆம் மாதம் 10 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையிலேயே குறித்த வழக்கின் சாட்சிப் பதிவுகளுக்காக இன்று முதல், தொடர்ச்சியான விசாரணைக்காக நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரச தரப்பு சாட்சிகளாக 12 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106