தீக்காயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி
Wednesday, May 4th, 2016
தேநீர் தயாரிப்பதற்காக அடுப்பைப் பற்ற வைப்பதற்கு மண்ணெண்ணெய் ஊற்றிய போது குடும்பப் பெண்மணியொருவர் உடலில் தீக் காயங்களுக்கு இலக்கான சம்பவம் நேற்றுச் செவ்வாய்க் கிழமை (03-05-2016) மதியம் யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்மணி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பிரபாகரன் தயாபதி (வயது-40) என்ற குடும்பப் பெண்மணியே தீக் காயங்களுக்கு இலக்கானவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக தொடர்ந்து கிளிநொச்சி காணப்படுகிறது - அரசாங்க அதிபர் அருமை நாயகம...
காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டமானது உலகத்துக்கு முன்னோடியான திட்டம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
செம்மணியில் ஆரம்பமானது அகழ்வுப் பணிகள் - ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
|
|
|
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவ...
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல - அரசாங்கம் என்ற வகையில், உங்களின் சிரமங்களை போக்கவும், அன்றாட வாழ்க...
உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொறிமுறையுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு அக்கற...


