வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிவுகளை கோருகிறது யாழ் மாவட்ட செயலகம்!

Monday, January 25th, 2021

2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலம் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரப்பட்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் மார்ச் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமைய அவர்கள் தமது முன்மொழிகளை சமர்ப்பிக்க முடியும் என்றும் மாவட்ட செயலகம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு - அம...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தப் பணி - இணையவழி முறைமை ஊடாக மாத்திரம் முன்னெடு...
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்துக்கான யாழ் மாவட்ட பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரி...