கோஹ்லி ஒரு சாட்டை !
Saturday, April 1st, 2017
இந்திய அணியின் தலைவர் கோஹ்லி ஒரு சாட்டை போன்றவர் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெர்வ் ஹியூஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
இத்தொடரில் இரு அணி வீரர்களும் இதுவரை இல்லாத அளவிற்கு மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இது குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மெர்வ் ஹியூஸ் கூறுகையில், இந்திய அணியின் தலைவர் கோஹ்லி, ஒரு சாட்டை மாதிரி, என்றும் அது நம் கையில் இருந்தால் தைரியமாகவும் எதிரில் இருந்தால் எதிரியாகவும் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
Related posts:
இலங்கை தொடரிலிருந்து அதிரடி வீரர் ஷான் மார்ஷ் விலகல்!
120 வீத உழைப்பைக் கொடுத்துள்ளேன் - கோலி உருக்கம்!
30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை வென்றது இலங்கை!
|
|
|


