இலங்கை வருகின்றார் ஜெர்மனிய நாடாளுமன்ற தலைவர்!

Wednesday, March 29th, 2017

சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பை ஏற்று ஜெர்மனிய நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நோர்பர்ட் லெம்மர்ட் தலைமையிலான நாடாளுமன்ற பிரதிநிதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இலங்கையில் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியமை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டுவதாக ஜெர்மனிய நாடாளுமன்றத்தின் தலைவர், ஜெர்மனிக்கான இலங்கையின் தூதுவர் கருணாதிலக்க அமுனுகமவை சந்தித்த போது கூறியுள்ளார்.

பல நாடுகள் இலங்கையின் இந்த சாதனையை அங்கீகரித்துள்ள நிலையில், ஜெர்மனிய நாடாளுமன்ற தலைவரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது. இலங்கை வரும் நோர்பர்ட் லெம்மர்ட் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச பிரதிநிதிகளையும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106