மானிப்பாய் சங்குவேலியைச் சேர்ந்த சிறுவனைக் காணவில்லை !
Monday, March 27th, 2017
யாழ். மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த சிறுவனொருவன் காணாமல் போயுள்ளதாகப் பெற்றோரினால் மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 வயதுடைய ஆனந்தராஜா நிஷாந்தன் என்ற சிறுவனே கடந்த-24 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளான். மேற்படி சிறுவன் காணாமல் போகும் போது பச்சை நிற ரீசேட்டும், மெல்லிய பச்சை நிறக் காற்சட்டையும் அணிந்திருந்தான்.
மேலும் குறித்த சிறுவன் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வருகிறது. குறித்த சிறுவன் தொடர்பாகத் தகவலறிந்தோர் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
இன்று நள்ளிரவுடன் மண்ணெண்ணெயின் விலை குறைவடைகின்றது!
எரிபொருள் தேவை 50 வீதத்தால் குறைந்துள்ளது - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்தள்ளதாக தொழில்ந...
|
|
|


