பொலிஸ் அதிகாரியை காப்பாற்றிய அமைச்சரை கௌரவித்த மகாராணி!

Sunday, March 26th, 2017

இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றம் மீது நடைபெற்ற தாக்குதலின்போது காயமடைந்த பொலிஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற போராடிய அமைச்சரை உயர் பதவி அளித்து இங்கிலாந்து ராணி எலிசபெத் கௌரவித்துள்ளார்.

இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம் லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் பாலம் அருகே உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த கட்டிடத்தின் வழியாக காரை வேகமாக ஓட்டி வந்த ஒரு தீவிரவாதி அங்கிருந்த மக்கள் கூட்டத்தின்மீது மோதினான்.

அதன் பின்னர் பாராளுமன்ற நுழைவு வாயிலை நோக்கி கத்தியுடன் ஓடிவந்து அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த பொலிஸாரை குத்தினார். அவனை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர வேறு தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் பாராளுமன்றம் முன்பு மக்கள் கூட்டத்துக்குள் காரை ஏற்றி தாக்குதல் நடத்தியவன் காலித் மசூத் (52) என அடையாளம் தெரிந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதலின்போது காயம் அடைந்த பொலிஸ் அதிகாரியின் உயிரை காப்பாற்ற பாராளுமன்ற எம்.பி.யும் பிரிட்டன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரமான டோபியாஸ் எல்வுட் என்பவர் போராடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களாக வெளியாகி பீதியை ஏற்படுத்தின.

இரத்தம் தோய்ந்த முகத்துடன் அவர் தோற்றமளித்த கோரக் காட்சிகள் தீவிரவாத தாக்குதலின்போது சம்பவ இடத்தில் ஏற்படும் பரபரப்பை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

யாரோ ஒரு பொலிஸ் அதிகாரி தானே..,? அவர் இருந்தால் என்ன?, இறந்தால் என்ன? என்று கருதி தனது உயிரை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கத்தில் சம்பவ இடத்தை விட்டு ஓடி விடாமல் தனது சமூகக் கடமையை மனிதநேயத்துடன் சரிவர நிறைவேற்றிய வெளியுறவுத்துறை மந்திரி டோபியாஸ் எல்வுட் டிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளும், புகழாரங்களும் குவிந்தன.

இந்நிலையில், இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தலைமையில் பிரிட்டன் அரசுக்கு ஆலோசனை கூறும் உயர்மட்ட கமிட்டியின் ஆலோசகர் பொறுப்பில் டோபியாஸ் எல்வுட்டை நியமித்து இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற தாக்குதலின்போது திறம்பட செயலாற்றிய பாதுகாப்புத்துறை மந்திரி பென் வாலஸ் என்பவருக்கும் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இந்தப் பொறுப்பில் மூத்த அரசியல்வாதிகள், கிறிஸ்தவ தேவாலய தலைமை பிஷப்புகள் ஆகியவர்களை நியமிப்பதுதான் அந்நாட்டு அரச குடும்பத்தின் மரபாக இருந்து வருவது, குறிப்பிட்டத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106