ஆசிய பசுபிக் வலையத்தின் சிறந்த நிதி அமைச்சருக்கான விருது நிதி அமைச்சருக்கு!
Sunday, March 26th, 2017
பிரித்தானியாவிலுள்ள “த பேங்கர் சஞ்சிகை’ வருடந்தோரும் நடத்திவரும் ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சர் 2017ஆம்ஆண்டிற்கான விருதுக்கான தெரிவில் ஆசிய பசுபிக் வளையத்தின் சிறந்த நிதி அமைச்சராக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய பொருளாதார புரட்சி ஒன்றிற்காக இலங்கை மக்கள் மத்தியில் உள ரீதியிலான மாற்று சிந்தனைகளை தோற்றுவிக்கும் வகையிலான பொருளாதார கொள்கையினை நடைமுறைப்படுத்தியமையால் இந்த விருது நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் “த பேங்கர் சஞ்சிகை”யின் ஆசிரியர் பிரயன் கெப்லென் (Brian Caplen) இந்த விருதை அமைச்சரிடம வழங்கினார்.
Related posts:
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 55 சதவீத கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு - ஜனா...
பொது போக்குவரத்து சேவையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரிப்பு - பொ...
2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி இன்று ஆரபம்!
|
|
|


