யாழில் டிப்பர் – மோட்டார்ச் சைக்கிள் விபத்து: இரு இளைஞர்கள் படுகாயம்

Thursday, March 23rd, 2017

யாழ். ஊரெழு அம்மன் கோவிலடிச் சந்தியில் இன்று வியாழக்கிழமை(23) முற்பகல்-10 மணிக்கு இடம்பெற்ற டிப்பர்- மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல்-10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புன்னாலைக்கட்டுவனிலிருந்து மூன்று இளைஞர்கள் யாழ். நகர் நோக்கி  மோட்டார்ச் சைக்கிளில் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அச் சமயத்தில் யாழ். நகரத்திலிருந்து பலாலி வீதியூடாகச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கவனமாக வாகனத்தைத் திருப்பிய போதும் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் சடுதியாகப் போட்ட பிரேக்கால் சுமார்-30 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு டிப்பருடன் மோதுண்டுள்ளனர்.

சம்பவத்தில் மோட்டார்ச் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஏழாலையைச் சேர்ந்த இளைஞர் காயங்கள் ஏற்படாத போதும் மோட்டார்ச் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த ஜேம்ஸ் டிரோன் மற்றும் ரூபன் கயன்சன் ஆகிய இரு இளைஞர்களும் படுகாயமடைந்தனர்.  படுயாமடைந்த இரு இளைஞர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106