22905 பேர் கொரிய மொழி பரீட்சைக்கு விண்ணப்பம்!
Tuesday, March 21st, 2017
கொரிய மொழி பரீட்சைக்காக 22,905 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இந்த பரீட்சைக்காக விண்ணப்பப்படிவங்கள் கடந்த 14ஆம், 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நாட்டின் 19 மத்திய நிலையங்களில் இவ்வாறு விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் தங்காலை பகுதியிலிருந்து அதிகளவான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. தங்காலையில் 3,388 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் மொத்தமாக 5 விண்ணப்பங்களே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
பரீட்சை நடைபெறும் திகதி மற்றும் பரீட்சை நிலையங்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்பட உள்ளதுடன், இது தொடர்பிலான மேலதிக விபரங்களை என்ற இணைய தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106