சோமாலிய கடற்படையினரின் தாக்குதலில் கடற்கொள்ளையர் ஒருவர் பலி – மீட்கும் பணி தீவிரம்!
Friday, March 17th, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஆறுபேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக வெளியான செய்தியில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்திருந்தார் என தெரியவந்திருந்தது.
இந்நிலையில் சற்று முன்னர் கிடைத்த தகவலின்படி, ஆறுபேர் படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
கடற் கொள்ளையர்கள் மீது சோமாலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், மற்றொருவர் காயமடைந்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆரிஸ் 13″ என்ற, 8 இலங்கையர்களுடன் சென்ற கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தினர்.
இந்நிலையில், இன்றைய தினம் கடத்தப்பட்ட கப்பலையும், இலங்கையர்களையும் மீட்பதற்காக அந்நாட்டு படையினர் பெரும் மோதலைத் தொடுத்தனர்.
இந்த மோதலின் போது, கடற்கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவருவர் படுகாயமடைந்துள்ளதாக கடற்கொள்ளையர் அப்துல்லாகி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடத்தப்பட்ட கப்பலை மீட்பதற்கான மோதல் உக்கிரமாக மேற்கொள்ளப்பட்டுவருதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இலங்கையர்கள் பாதுகாப்பாக குறித்த கப்பலில் உள்ள அறையில் இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106