செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்கிறது விண்ஓடம்!
Tuesday, March 14th, 2017
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் அதிநவீன ராக்கெட் என்ஜின்களின் சோதனை தற்போது அமெரிக்காவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்வது என்பது உலகளவில் விஞ்ஞானிகளின் பெரும் கனவாக அமைந்துள்ளது.
இதற்கான முயற்சிகள் நாள்தோறும் நடைபெற்று வரும் சூழலில் தற்போது இதற்கான பணியில் அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் ஒருப்படி முன்னேறியுள்ளனர். மிசிசிபி நகரில் உள்ள Stennis விண்வெளி ஆய்வு மையத்தில் Orion ராக்கெட்டின் என்ஜின்கள் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஓரியன் ராக்கெட் தான் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஏற்றிச்செல்ல தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ராக்கெட்டிற்கு தேவையான RS-25 வகையை சேர்ந்த அதிநவீன 4 என்ஜின்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சாதாரண ராக்கெட்டுகளை விட இந்த ஓரியன் ராக்கெட்டின் வேகம் சுமார் 5,00,000 பவுண்ட் சீற்றத்திற்கு சமமானது. என்ஜின்கள் சோதனை சுமார் 6 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் வரை செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனையின்போது என்ஜின்களில் இருந்து வெளியான புகை மூட்டத்தை விஞ்ஞானிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த முயற்சியின் மூலம் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு ஏற்றிச்செல்லும் முயற்சி ஒரு நாள் நனவாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106