சயிடம் குறித்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு!

Tuesday, March 14th, 2017

சயிடம் நிறுவன விவகாரம் தொடர்பில் இலங்கை வைத்திய சபை, உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. மாலபே வைத்தியக் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த கல்லூரிக்கு மருத்துவப் பட்டத்தை வழங்க அனுமதியுள்ளது என அண்மையில் தீர்ப்பளித்தது.

மேலும், அங்கு பட்டத்தை நிறைவு செய்தவர்களை வைத்தியர்களாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில், இந்த தீர்ப்பு குறித்து இலங்கை வைத்திய சபை உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது.

 

Related posts:

கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இதுவரை 50 பேர் பூரண சுகம் - 133 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் -...
அதிகரித்துச் செல்கிறது காச நோயாளர்களின் எண்ணிக்கை – இலங்கை மக்களை எச்சரிக்கிறது காசநோய் மற்றும் சுவா...
சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் - அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

மீன்பிடி படகு ஏலம் தொடர்பில் இரு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையே புரிந்துணர்வு உள்ளது - இந்திய உயர்ஸ...
வரிகளை நீக்கினால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
நள்ளிரவுமுதல் மீண்டும் விலை குறைகிறது லிட்ரோ எரிவாயு - நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவிப்பு!