ஜனாதிபதி ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ பயணம்!
Sunday, March 12th, 2017
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ரஷ்யாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தமையினை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம் மாத இறுதி வாரமளவில் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் முகமாக மேற்கொள்ளும் விஜயத்தின் போது சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளின் முக்கிய விடையங்கள் குறித்து அந்நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தையும் நடத்தப்படவுள்ளது.
அத்துடன் யுத்தத்திற்கு பின்னர் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு உட்பட பல சிக்கலான சந்தர்ப்பங்களில் ரஷ்யா இலங்கைக்கு பக்கபலமாகவும், ஆதரவாகவும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூவின மக்களும் வாழும் மாகாணம் என்பதால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகின்றது - ஈ.பி....
எமது அபிவிருத்திக்கு நாமே தடையாக உள்ளோம் - யாழ்.மாவட்டச் செயலர் !
இளைஞர் சமூகத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க விசேட நடவடிக்கை - அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
|
|
|


