பங்களாதேஷீக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி!

Saturday, March 11th, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 259 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் தமது 2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இனிங்ஸில் 494 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டாவது இனிங்ஸில் 6 விக்கெட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

பங்களாதேஷ் அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106