பாவனைக்குதவாத அரிசியை விற்ற வர்த்தகர் கைது!
Friday, March 10th, 2017
கொழும்பு 12 இல் அமைந்துள்ள மொத்த வியாபார நிலையத்தில் ரூபா 10 இலட்சம் பெறுமதியான பாவனைக்குதவாத கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவர் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பணிப்புரையின் பேரில் கொழும்பில் வியாபார நிலையங்களில் இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வியாபார நிலையத்தை சுற்றிவளைத்த விசாரணை அதிகாரிகள் பாவனைக்குதவாத 25 கிலோ கிராம் கொண்ட 313 சாக்குகளை கைப்பற்றிருந்தனர்.
குறித்த தொகையான அரிசி 10 கிலோ கிராம், 5கிலோ கிராம் அளவு கொண்ட சாக்குகளில் அடைக்கப்பட்டிருந்ததையும் அவர்கள் கண்டு பிடித்தனர்.
இந்த சட்ட விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட குறித்த வர்த்தகர் எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாளிகாகந்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
பாவனைக்குதவாத பொருட்களையும், காலாவதியாகிய பண்டங்களையும் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு, எதிராக எந்த வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சு, அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106