உலகில் முதலிடத்தை தட்டிச் சென்ற விமானநிலையம் !
Tuesday, March 7th, 2017
சிறந்த சேவைகளை பயணிகளுக்கு வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம்.
9 வருடமாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமானநிலையம் வருடத்திற்கு 12 மில்லியன் பயணிகள் வந்து செல்வதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது.
பிறகு 2016-ம் ஆண்டில் 15 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு வளர்ந்தது.
இந்நிலையில் சர்வதேச விமான நிலைய கவுன்சில் நடத்திய சிறந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் விமான நிலையங்களின் தரப்பட்டியலில் அந்த ஐதராபாத் விமான நிலையமானது 5-க்கு 4.9 அளவீடு பெற்று உலகிலேயே முதலிடத்தை தட்டிச் சென்றிருக்கிறது.
Related posts:
இரு தமிழர்கள் மரண தண்டனைக்கு எதிராக இந்தியா மேன்முறையீடு !
இறைவனின் பெயரில் வன்முறை வேண்டாம் - போப் பிரான்சிஸ்!
கென்ய தேர்தல்: ரெயிலா ஒடிங்கா முன்னணி!
|
|
|


