சுற்றுலா சென்ற 20 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Monday, March 6th, 2017

மாத்தறை பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 20 பேர் திடீர் சுகயீனமுற்ற நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு இவர்கள் இவ்வாறு தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 15 மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உணவு விஷமடைந்தமையே இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும், இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள, மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106