அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் முடிவு!
Friday, April 29th, 2016
உள்ளூராட்சி சபை தேர்தலை ஒத்திவைத்தமை தொடர்பாக உள்ளூராட்சி சபை முன்னாள் உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 18 பேர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். இதன் போது, எல்லை நிர்ணயம் இன்னும் நிறைவு செய்யப்படாமை காரணமாக இந்த தேர்தலை ஒத்திவைத்ததாக அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் தேர்தலை ஒத்திவைத்தன் காரணமாக ஜனநாயக உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இந்த வழக்கை மீண்டும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ள உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
Related posts:
ஆலயங்களில் மிருகபலி வேள்வி நடத்துவதற்கு யாழ் மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு : அகில இலங்கை இந...
இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
வீதியை மறித்து லொறியை நிறுத்திய சாரதி - பாடசாலைக்கு தாமதமாக சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்!
|
|
|


