இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
Thursday, May 26th, 2016
தேசிய அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீத அதிகரிப்பு தொகையினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்காததையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமிழ் முற்போக்கு கூட்டணியினால் திட்டமிட்டபடி இன்றைய தினம் தலைநகரில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியும் முதலாளிமார் சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவும் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கத்துவம் பெறும் பங்காளி கட்சிகள் உட்பட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மகாணசபை உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
அவசர நிதியாக இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடன் கையிருப்பை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானம்!
இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கையையும் பாதிக்கும் - இந்தியாவுக்கான இலங்கை உ...
வடமராட்சியில் பட்டம் ஏற்றும் திருவிழா பணிகள் ஆரம்பம்!
|
|
|


