இந்தியாவில் கடும் வெயிலுக்கு 4200 பேர் உயிரிழப்பு!

Friday, April 29th, 2016

வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனல் காற்றும் பரவரலாக வீசுகிறது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை கோடை வெயில் மற்றும் அனல் காற்றின் கொடுமை தாங்காமல் 4,200 பேர் உயிழந்துள்ளதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக கோடை வெப்பத்தின் வீரியம் அதிகரித்துள்ளது.

வெப்பத்தை தாங்க முடியாமல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த இரு தினங்களில் மட்டும் 96 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் கோடை வெயில் துவங்கி ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் வாட்டி வதைக்கிறது. வெயிலின் தாக்கத்திற்கு ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் உயிர் பலி ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106