ஐ.நா பொதுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!
Thursday, March 2nd, 2017
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கு வர உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்றிருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா பொதுச் செயலாளரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட பொதுசெயலாளர் குட்டாரெஸ், விரைவில் இலங்கை வருவதாக உறுதியளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் இதுவரையில் இலங்கை வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும்போதுதான் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும் - ஐங்கரன்!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்...
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்கள...
|
|
|


