யாழ். மடத்தடி குழு மோதல் சம்பவம்: மேலும் ஆறு பேர் பொலிஸாரால் கைது !
Wednesday, March 1st, 2017
யாழ். மடத்தடிப் பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குழு மோதல் தொடர்பில் மேலும் ஆறு பேர் யாழ். பொலிஸ்நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் பிரதான வீதி மடத்தடிச் சந்திப் பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் இரு குழுக்களுக்கிடையே மோதல் மூண்டது. குறித்த சம்பவத்தில் அப் பகுதியிலிருந்த வீடுகள் சேதமாக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டியொன்றும் சேதமாக்கப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் வாள்கள், சைலன்சர்கள், பொல்லுகள் கற்களால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர் இந்நிலையில் நேற்று மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ் பொலிஸார் தெரிவித்தனர். இதனுடன் தொடர்புபட்ட ஏனைய நபர்களை தொடர்ந்தும் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நேற்று விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106