அதிகரிக்கும் செலவீனம் : சிறுதானியப் பயிர்ச் செய்கை கண்டாவளையில் வீழ்ச்சி !

Wednesday, March 1st, 2017

கண்டாவளைப் பிரதேசத்தில் சிறுதானிய பயிர்ச்செய்கையில் ஏற்படும் அதிக செலவினத்தால் அதிக விவசாயிகள் தெங்குப் பயிர்ச்செய்கையிலே தற்போது கவனம் செலுத்துகின்றனர் என்று கண்டாவளைப் பிரதேச விவசாயக் கூட்டத்தில் விவசாயிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அங்கு விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரமந்தனாப் பகுதியில் ஏற்ற நீர்ப்பாசன வசதி கொண்ட சுமார் 400 ஏக்கர் காணி உள்ளது. அதில் முன்னைய காலங்களில் சிறுதானியப் பயிர்களே செய்கைப் பண்ணப்பட்டன. அதனை தற்போதும் தொடரும் அதிக பொருள் செலவு, நீண்ட அலைச்சல், போதிய வருமானம் இன்மை உள்ளிட்ட பல சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. இதன் காரணத்தால் தற்போது இந்தப் பிதேசத்தில் தென்னைப் பயிர்ச்செய்கை அதிகரித்துள்ளது இதே நிலமை நீடிக்குமானால், இந்தக் கிராமத்தில் இன்னும் 3 ஆண்டுகளில் சிறு தானியச் செய்கைக்கே காணியற்ற நிலமை காணப்படும் ஏனெனில் இன்று வரையான நிலவரப்படி 200 ஏக்கரை அண்மித்த நிலப் பரப்பரப்பில் தென்னை பயிரிடப்பட்டு வேலிகள் அமைக்கப்படுகின்றன.

இன்றைய நிலையில் சிறு தானியச் செய்கைக்கு அதிக செலவும் நீண்ட பராமரிப்பும் ஏற்படுகின்ற போதிலும் போதிய வருமானம் இல்லாத நிலமையே காணப்படுகின்றது. ஆனால் தென்னச்செய்கையில் 5ஆண்டுகள் காத்திருக்க அதன் பின்னர் போதிய வருமானம் கிட்டுகின்றது எனவே நாம் விரும்பியே அதனைப் பயிரிடுகின்றோம். என்றனர். குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த பிரதேச செயலர் அடுத்த மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார்.

images_28



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106