மைதானத்தில் உயிருக்கு போராடிய வீரரின் உயிரைக் காப்பாற்றிய எதிரணி வீரர்!
Tuesday, February 28th, 2017
செக்குடியரசில் நடந்த பிரிமியர் லீக் கால்பந்து போட்டியின் போது இன்னொரு வீரருடன் மோதி விழுந்த எதிரணி கோல் கீப்பர் வீரரின் உயிரைக்காப்பாற்றிய ஸ்லோவாகோ அணியைச் சேர்ந்த கோனில் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செக்குடியரசு லீக் கால்பந்து போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இப்போட்டியில் போகிமியான்ஸ் அணியும், ஸ்லோவாகோ அணியும் மோதின.
இதில் ஆட்டம் சென்று கொண்டிருந்த போது போகிமியான்ஸ் அணியைச் சேர்ந்த கோல்கீப்பர் மார்டின்பெர்கோவக் பந்தை எட்டி தன் தலையால் அடித்துள்ளார், அப்போது அருகே இருந்த டேனியல் கிரிச் அவரை எதிர்த்து அடிக்க முற்பட அப்போது இருவருமே மைதானத்தில் விழுந்தனர்.
இதில் மார்டின்பெர்கோவக் அந்த இடத்திலே சுருண்டு விழுந்து பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். இதைக்கண்ட எதிரணி வீரர் கோன் உடனடியா அவரது வாயில் தன் கையை விட்டு, அதன் பின் அவரின் நாக்கை வெளியில் எடுத்து உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இது குறித்து மார்டின்பெர்கோவக் தன்னுடைய பேஸ்புக்பக்கத்தில், கோனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இக்கட்டான நிலையில் இருந்த எனக்கு உயிர் கொடுத்த உனக்கு என்னுடை மனமார்ந்த நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106