யாழ்.பல்கலை மாணவர்கள் உயிரிழப்பு –கைதான பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு!

Friday, February 24th, 2017

யாழ்.கொக்குவில் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸார் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை யாழ்.நீதவான் நீதிமன்றத்தில், பதில் நீதவான் வீ.ரி.சிவலிங்கம் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது.

நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர்களான பொலிஸ் உத்தியோகஸ்தர்களை எதிர்வரும் மார்ச்மாதம் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் – குளப்பிட்டிசந்தியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம்திகதி உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை விபத்து என பொலிஸார் குறிப்பிட்ட போதிலும், மாணவர்களின் சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேதபரிசோதனையின் போது, ஒருவருடைய சடலத்தில் துப்பாக்கிசூட்டுக்காயம் காணப்பட்டது.

இதனை அடுத்து, சம்பவதினத்தன்று கடமையிலிருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

prison2-400x300-720x480



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106