இலங்கைக்கு இந்தோனேஷியா உதவி!

Friday, February 24th, 2017

இலங்கையில் பலபிரதேசங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டு மக்களுக்காக 5 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியினை நிவாரணமாக வழங்க இந்தோனேஷியா அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய வௌவிவகார பிரதி அமைச்சர் எ.எம்.பஷீர் இடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. ஐனாதிபதி காரியாலயத்திலேயே இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி ,

இந்தோனேஷியா அரசால் இந்நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கவுள்ள உதவி தொடர்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். மேலும் ,இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோவிடோடா , அந்நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழைத்துள்ளதாக இதன்போது கருத்து தெரிவித்த இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106