இலங்கையர்கள் இணையத்தின் மூலம் பிரித்தானியா விசாவிற்கு விண்ணப்பிக்கலாம்!
Thursday, July 28th, 2016
இலங்கையர்கள் இணையத்தின் ஊடாக பிரித்தானியா விசாவிற்காக விண்ணப்பம் செய்ய முடியும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுற்றுலா விசாக்களுக்காக விண்ணப்பம் செய்யும் இலங்கையர்கள் இணையத்தின் ஊடாக விண்ணப்பம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. இந்த புதிய விசா விண்ணப்ப நடைமுறைக்கு Access UK என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பங்களை உள்நாட்டு மொழிகளில் வாசித்து விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் வழிவகை செய்பய்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2014ம் ஆண்டில் சீனாவில் இந்த திட்டம் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பினைத் தொடர்ந்து உலகின் ஏனைய நாடுகளுக்கும் இந்த முறையை அறிமுகம் செய்வதில் பிரித்தானியா ஆர்வம் காட்டி வருகின்றது.
Related posts:
ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும் - யாழ். பிரதேச செயலர்!
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எச்...
கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதால் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடையு...
|
|
|


