எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தயார்!
Thursday, April 28th, 2016
ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகிய விமான சேவைகளை தரமான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்குவோம். எமிரேட்ஸ் முன்வந்தால் அனுமதி வழங்குவோம். இது தொடர்பில் ஆலோசனை சபையே தீர்மானிக்கும் என்று மின்சக்தி மற்றும் புதுபிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.
இரு விமான சேவைகளின் கடன் மற்றும் நஷ்டங்களுக்கு முன்னாள் ஆட்சியாளர்களே பிரதான காரணமாவார். தனது சுய நலனுக்காகவே அவர் குறித்த நிறுவனங்களை அரச மயப்படுத்தினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் மத்தள விமான நிலையத்தை நாம் ஒருபோதும் தனியார் மயமாக்க மாட்டோம். மே தினத்தை வெவ்வேறாக இரு பிரதான கட்சிகள் ஏற்பாடு செய்வதினால் தேசிய அரசாங்கத்திற்கு பாதிப்பில்லை. அது ஜனநாயகத்திற்கு வலு சேர்க்கும் அம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
புனர்வாழ்வு பெற்ற பத்துப்பேர் விடுதலை!
சுற்றிவளைப்பில் சிக்கிய 484 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு!
ஆலயங்களில் ஒன்றுகூடுவதை தவிருங்கள் - பொதுமக்களிடம் யாழ் மாவட்ட செயலகம் வேண்டுகோள்!
|
|
|
பெண்டோரா பேப்பர்ஸிலுள்ள இலங்கையர்கள் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு!
இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 53 மில்லியன் அமெ. டொலர் செலுத்தப்படவுள்ளது - ...
மின்சாரக் கட்டணத் திருத்தம் – பரிந்துரை 6 ஆம் திகதி்யறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிப்பு ...


